தமிழ் சினிமாவில் ‘நேரம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார் நஸ்ரியா அதன் பிறகு ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ‘ராஜா ராணி’ போன்ற சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார் இவரும் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலும் காதலித்து 21 ஆகஸ்ட் 2014 அன்று திருமணம் செய்துக்கொண்டனர் இவர்களது திருமணம் திருவனந்தபுரத்தில் நடைப்பெற்றது ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்யும் போது அவரை விட நஸ்ரியா 12 வயது சிறியவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதிலிருந்து நஸ்ரியா ப்ரேக் எடுத்துக்கொண்டார் ஃபகத் ஃபாசில் சமீபத்தில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘விக்ரம்’படத்தில் நடித்துள்ளார் ’அந்தே சுந்தராணிகி’ படத்தின் மூலம் நானிக்கு ஜோடியாக தெலுங்கில் அறிமுகமானார் நஸ்ரியா இப்படம் தமிழில் அடடே சுந்தரா என்ற தலைப்பில் தமிழில் டப் செய்யப்பட்டது திருமணமாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இன்ஸ்டாகிராமில் க்யூட்டான ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் நஸ்ரியா!