15 ஆண்டுக்கும் மேலாக சினிமாவில் கலக்கி வருகிறார் நயன்தாரா



முன்னணி நடிகர்களுடன் நடிப்பதோடு மட்டுமல்லாமல், கதையின் நாயகியாகவும் நடித்து அசத்தி வருகிறார்



கோலிவுட்டில் ஏறுமுகமாக இருக்கும் நயன்தாராவின் மாஸ் ஏறிக்கொண்டேதான் இருக்கிறது



சில வருடங்களுக்கு முன்பு ரூ. 3 கோடி இருந்த அவரின் சம்பளம் ரூ. 5 கோடியாக உயர்ந்தது



ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கும் படத்தில் நயன்தாராவிற்கு அதிக சம்பளம் என தகவல் வெளியாகியுள்ளது



ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்த தனி ஒருவன் படம் மாபெரும் வெற்றிப்பெற்றது



இந்த ஜோடி அகமது இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தில் மீண்டும் கைகோர்த்துள்ளது



நயன்தாராவுக்கு 20 நாள் கால்ஷீட்டுக்கு ரூ.10 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது



இது உண்மையாக மாறினால் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பார் நயன்



புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது