கறுப்பின எழுத்தின் அடையாளமாக திகழ்ந்தவர் மாயா ஏஞ்சலோ.



மிக எளிய குடும்பத்தில் பிறந்து எண்ணற்ற ஒடுக்குமுறைகளைச் சந்தித்தவர் மாயா.



மாயா ஏஞ்சலோ ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல. கவிஞர், நடிகை, நாடக ஆசிரியர், பாடலாசிரியர், பத்திரிகையாளர், பெண்ணுரிமை போராளி... .



அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் 4- ம் நாள் பிறந்தவர் மாயா ஏஞ்சலோ.



இவருடைய சகோதரர் பெய்லி ஜூனியர் இவருக்கு 'மாயா' எனும் பெயரைச் சூட்டுக்கிறார்



மாயாவுக்கு எட்டு வயதாக இருக்கும்போது, அவரின் அம்மாவின் நண்பரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்.



மாயா தனது 17 வது வயதில் தன் வலிகளை எழுத்தாக இறக்கி வைத்து 'I Know Why the Caged Bird Sings' என்ற நூலை எழுதினார்.



மாயா ஏஞ்சலோவுக்கு மூன்று கட்டுரைத் தொகுப்புகளும் பல கவிதைத் தொகுதிகளும் வெளிவந்துள்ளன.



நாடக நடிகை, நைட் கிளப் டான்ஸர் உள்ளிட்ட ஏராளமான வேலைகளைப் பார்த்துள்ளார்.



'கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது என்று எனக்குத் தெரியும்' என்பது இவரின் சுயசரிதை!