மாரி செல்வராஜின் 'வாழை' திரைப்பட பூஜை தொடங்கியது !

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ்

இவரது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் திரைப்படம் 'வாழை'

வாழை திரைப்படத்தின் பூஜை இன்று துவங்கியது

இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கிளாப் அடித்துப் படப்பிடிப்பைத் துவங்கி வைத்தார்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மாமன்னன்'

மாமன்னன் திரைப்படம் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாகிறது

இந்நிலையில் மாரி செல்வராஜின் அடுத்த திரைப்பட பூஜையை உதயநிதி தொடங்கி வைத்துள்ளார்

வாழை திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணைந்து உருவாகிறது

இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பதிவிட்டு தனுஷ் உட்பட பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்