காலை உணவை தவிர்ப்பதைவிட ஏதேனும் எளிமையாக நாமே வீட்டில் செய்யலாம். அப்படியான உணவுக்கான டிப்ஸ் இதோ.

மலாய் டோஸ்ட் அல்லது க்ரீம் டோஸ்ட் செய்வது மிகவும் எளிதானது.

அதை செய்வதற்கான ரெசிபி இதோ. சிறியவர்கள் முதல் முதியவர் வரை இதனை செய்து கொள்ள முடியும்.

வெண்ணெய்: இரண்டு டேபிள் ஸ்பூன், மலாய்: 4 டேபிள்ஸ்பூன், சர்க்கரை: 4 டீஸ்பூன், ப்ரெட்: 4 துண்டுகள்

இந்த மலாய் டோஸ்டை செய்ய முதலில் ஒரு பேனில் வெண்ணெய் போடவும். பின்னர் அது உருகும் வரை காத்திருப்போம்.

அது உருகி பேன் முழுவதும் படர்ந்த பின்னர் அதன் மீது பிரெட் ஸ்லைஸ்களைப் போடவும். பொன்னிறமாக வேண்டும்.

சூடான பால் அல்லது ஒரு கோப்பை தேநீருடன் இதனை சாப்பிடலாம்.

சர்க்கரை வேண்டாம் என நினைப்பவர்கள் உப்பு தூவி சாப்பிடலாம். அதன் மீது உலர் பழங்கள் அல்லது செர்ரி பழங்கள் போட்டு சாப்பிடலாம்.

இதை சாண்ட்விச் போன்றும் செய்யலாம். ஒன்றின் மீது இரண்டு பிரெட்கள் அடுக்கி இவ்வாறாக செய்யலாம்.

நடுவில் மலாய், சர்க்கரை அல்லது உப்புக் கலவை இருக்கும்.

சாப்பிட்டால் சும்மா சுவை அள்ளும்.