ட்லி பாஸ்தா ரெசிபியை நாங்க உங்களுக்கு ரெக்கமண்ட் பண்றோம். 12 இட்லி, 1 கப் வெங்காயம் (பொடியாக நறுக்கியது), 1 கப் குடைமிளகாய், 1 கப் தக்காளி, 1 மேசைக்கரண்டி எண்ணெய், ஒரு தேக்கரண்டி பெருங்காயம், ஒரு தேக்கரண்டி ஜீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி சிவப்பு மிளகாய்ப் பொடி, 1 சிவப்பு மிளகாய், 1 தேக்கரண்டி வினிகர் மற்றும் 1 மேஜைக் கரண்டி சோயா சாஸ், 2 மேஜைக்கரண்டி பாஸ்தா சாஸ். இட்லியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு அடி ஆழமான கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். வெங்காயம் தக்காளி குடை மிளகாய் உப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். நன்றாக மிக்ஸ் ஆன பின்னர் அதில் இட்லியை சேர்க்கவும். இட்லி மசாலாவில் நன்றாக கலந்துவிட வேண்டும்.