பல் மஞ்சளா இருக்கா? வெள்ளையாக்க ஈஸி டிப்ஸ் இதோ

Published by: ராஜேஷ். எஸ்

பேக்கிங் சோடாவில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து வாரத்திற்கு 1–2 முறை பிரஷ் செய்தால் மஞ்சள் தன்மை குறையும்.

காலை வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெயை வாயில் 10–15 நிமிடங்கள் கொப்பளிப்பது பற்களை வெண்மையாக்க உதவும்.

சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பற்களில் தேய்த்தால் கறைகள் குறையும்.

ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து வாயைக் கொப்பளித்தால் பாக்டீரியா குறைந்து பற்களின் நிறம் பிரகாசிக்கும்.

ஸ்ட்ராபெர்ரியை கூழாக்கிப் பற்களில் தேய்த்தால் இயற்கையான வெண்மையாக்கும் விளைவு கிடைக்கும்.

வாரத்திற்கு ஒருமுறை ஆக்டிவேட்டட் சார்கோல் கொண்டு பல் துலக்குவதால் நச்சுக்கள் மற்றும் கறைகள் நீங்கும்.

வேப்பங்குச்சியால் பல் துலக்குவது பழங்காலத்திலிருந்தே உள்ளது. இது பாக்டீரியாவைக் குறைத்து பற்களை சுத்தமாக வைத்திருக்கும்.

கேரட், ஆப்பிள் போன்ற நார்ச்சத்து உணவுகள் கிளீனராக செயல்பட்டு பற்களை சுத்தமாகவும் வெள்ளையாகவும் வைத்திருக்க உதவும்.

கால்சியம் அதிகம் உள்ள உணவுகள் பற்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

இந்த குறிப்புகளை மிதமாக பின்பற்ற வேண்டும். அதிகமாக பயன்படுத்தினால் பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.