இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் கூந்தலைப் பராமரிப்பது ஒரு சவாலாக மாறிவிட்டது. மாசுபாடு, மன அழுத்தம், சரியான உணவு உட்கொள்ளாதது போன்ற காரணங்களால் முடி உதிரும் நிலை ஏற்படுகிறது.
நீங்கள் நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தலை விரும்பினால், இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும். இவை மிகவும் எளிமையானவை மற்றும் பயனுள்ளவை.
ஊறவைத்த வெந்தயம், நெல்லிக்காய் தூள், சிறிது ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து செய்யப்பட்ட பேஸ்ட் முடியை வலிமையாக்குகிறது. இது முடியை அடர்த்தியாகவும் செய்யும்.
தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு மசாஜ் செய்வது நல்லது. இது, ரத்த ஓட்டம் அதிகரித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவும்.
கூந்தல் சுத்தத்திற்காக சிகைக்காய் பயன்படுத்தலாம். இது தலையில் தோலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பொடுகு வராமல் தடுக்கும். கூந்தலை சேதமடையாமல் பாதுகாக்கும்.
சல்பர் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள வெங்காய சாறு, முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது. இது முடி வேகமாக வளரவும், அடர்த்தியாகவும் உதவுகிறது.
நெல்லிக்காய் பொடியை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்யவும். முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தவும், உள்ளிருந்து முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தலையில் தடவலாம்.
மன அழுத்தம் கூந்தல் உதிர்வதற்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும். அதை கட்டுப்படுத்தினால் உங்கள் கூந்தல் வலிமையாகவும், ஆரோக்கியமாகவும் மாறும். அதற்கு யோகா, தியானம் செய்யலாம்.
பழங்கள் காய்கறிகள் புரதம் அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். இது உங்கள் தலைமுடியை நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கும்.
மாசுபடுவதிலிருந்து உங்கள் கூந்தலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தவறாமல் ட்ரிம் செய்வதன் மூலம், கூந்தல் ஆரோக்கியமாகவும், மிருதுவாகவும், சேதமடையாமலும் இருக்கும்.