தொடை இடுக்கில் அரிப்பா? - உடனடியாக சரி செய்ய வழிகள்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

கோடை காலத்தில் தொடை இடுக்கில் ஏற்படும் பூஞ்சை தொற்று மிகவும் ஆபத்தானது. இதனை ஆரம்பத்திலேயே குணப்படுத்தாவிட்டால் சரும பாதிப்பு மிக மோசமாக இருக்கலாம்.

இத்தகைய சரும பூஞ்சை தொற்றை நாம் வீட்டின் சமையலறை பொருட்கள் மூலம் குணப்படுத்த முடியும்.

தேயிலை மர எண்ணெயை(Tea Tree Oil) தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து பூசினால் உடனடியாக சரியாகும்

ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து பூஞ்சை தொற்று மீது பூச பாதிக்கப்பட்ட இடம் குணமாகும்

கற்றாழை ஜெல்லை தொற்று ஏற்பட்ட இடத்தில் பூசினால் எரிச்சல், அரிப்பு மற்றும் வீக்கம் குறைய வாய்ப்புள்ளது.

சமையல் சோடாவை சிறிதளவு தண்ணீருடன் கலந்து பூஞ்சை மீது பூசி வர பாதிப்பு குறையும்

கடுமையான அரிப்பு ஏற்பட்டால் ஐஸ் கட்டியைப் பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்கலாம். ஒவ்வொரு முறையும் சுத்தமான, புது துண்டை பயன்படுத்தவும்

அரிப்பு, தோல் சிவத்தல், எரிச்சல் போன்றவை ஏற்பட்டால் எக்காரணம் கொண்டு அதனை சொரிந்து விடாதீர்கள். பிரச்னை தீவிரமாகும்.