கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகிய சத்துக்களை அதிகம் கொண்டது பால். எலும்பு மற்றும் தசை வலிமையை அதிகரிக்கிறது.
எலும்புகளை வலுப்படுத்துவதில் சோயா முக்கிய பங்காற்றுகிறது. இது கால்சியம் சத்தையும் அதிகரிக்கிறது.
எலும்பு வலிமைக்கு தயிர் உதவுகிறது. இது கால்சியம் மற்றும் புரோபயோடிக்குகளின் ஆதாரமாக திகழ்கிறது.
ஏராளமான நன்மைகள் கொண்ட முட்டையில் புரதம் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இது எலும்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
கீரைகள், முட்டைக்கோஸ் போன்றவற்றில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. எலும்பின் வலிமையை அதிகரிக்க இவை உதவுகிறது. கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்து இதில் உள்ளது.
எலும்பு சிதைவைத் தடுக்கும் வலிமை எள் விதைகளுக்கு உண்டு. இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளது.
கால்சியம், மெக்னீசியம் சத்தை அதிகம் கொண்டது பாதாம். இதை ஊறவைத்து சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
பனீரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இது எலும்பின் வலிமையை அதிகரிக்க முக்கிய பங்காற்றுகிறது.
கோதுமை, ஓட்ஸில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. இது எலும்பின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது.