வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லையை சரி செய்ய டிப்ஸ் பார்க்கலாம்



ஒரு பெளலில் ஒரு ஸ்பூன் ஷாம்பூ, ஒரு மூடி டெட்டால் சேர்த்துக் கொள்ளவும்



மேலும் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவும் 2 ஸ்பூன் வினிகரும் சேர்த்துக் கொள்ளவும்



இதை ஸ்பூன் வைத்து நன்றாக கலக்கி விட்டு இதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்



மீண்டும் ஒருமுறை கலந்து விட்டு இதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்



இதை கதவு, ஜன்னல் ஓரங்களில் அடித்து வைத்தால் இந்த வாசனைக்கு பல்லி வராது



கேஸ் ஸ்டவ், அருகே அடிப்பதை தவிர்த்து மற்ற இடங்களில் இதை பயன்படுத்தலாம்