லோகேஷ் கனகராஜ் பூர்வீகம் கோயம்புத்தூரில் உள்ள கிணத்துக்கிடவு.




1986 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி பிறந்தவர்.



கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் ஃபேஷன் டெக்னாலாஜி முடித்தார்.



தொடர்ந்து எம்.பி.ஏ முடித்தவர் தனியார் வங்கியில் வேலை செய்தார்.



வங்கியில் நடந்த குறும்பட போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வென்றார்.



தொடர்ந்து குறும்படங்களை எடுத்து வந்த அவர் அவியல் படத்தில் களம் என்ற குறும்படத்தை இயக்கினார்.


லோகேஷ் கனகராஜ்ஜிற்கு 3 சகோதரர்கள் உள்ளனர்.




கடந்த 2012 ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆத்விகா என்ற பெண் குழந்தை உள்ளது.



மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானர்.



தொடர்ந்து ‘கைதி’, ‘ மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.


இவரது இயக்கத்தில் அடுத்ததாக விக்ரம் படம் வெளியாக தயாராக இருக்கிறது.