75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ளது

சுதந்திர தினத்தின் போது முக்கிய பங்கு வகிப்பது தேசிய கீதம்

நம் தேசிய கீதம் குறித்து கொஞ்சம் தெரிந்து கொள்வோம் வாங்க...

தேசிய கீதம் வங்காள மொழியில் இயற்றப்பட்டது

தேசிய கீதம் 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி முதன் முதலாக பாடப்பட்டது

ரபீந்திர நாத் தாகூரால் எழுதப்பட்ட இப்பாடல் 1950ஆம் ஆண்டு தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது

தேசிய கீதத்தின் ஆங்கில பதிப்பு 1919ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது

தேசிய கீதத்தின் முதல் பதிவு 54 விநாடிகளுக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது

தேசத்தில் உள்ள மக்களின் பாரம்பரியம், வரலாறு மற்றும் நம்பிக்கைகள் குறித்த பாடல் தான் நமது தேசிய கீதம்

பல மொழி, பலதரப்பட்ட மக்களை கொண்ட நாடு இந்தியா என்பதை பறைசாற்றும் வகையில், தேசிய கீதம் அமைக்கப்பட்டுள்ளது