பிரபல வலைப்பதிவரும் இன்ஃப்ளூயன்சருமான அனுனய் சூட், இறந்த செய்தி வெளியாகி, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

அனுனய் சூட் 32 வயதில் காலமாகி உள்ளார்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. பிரபல டிராவல் இன்ஃப்ளூயன்சராக இருந்ததோடு, அனுனய் சூட் ஒரு புகைப்படக் கலைஞராகவும் இருந்தார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு லட்சக்கணக்கான பின்தொடர்பவர்கள் இருந்தனர்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

வீடியோக்கள் மூலம், அனுனய் சூட், உலகம் முழுவதும் உள்ள அழகான இடங்களை,பயண குறிப்புகளை பகிர்ந்து கொண்டார்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

அவரது மரணத்திற்கு முன் அவரது கடைசி பதிவு லாஸ் வேகாஸில் இருந்து வந்தது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

அவரின் குடும்பத்தினர், ‘’இந்த கடினமான நேரத்தில், உங்கள் அனுதாபத்தையும், எங்கள் தனிமைக்கான மரியாதையையும் நாங்கள் கோருகிறோம். தயவுசெய்து எங்கள் வீட்டின் வெளியே கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

அனுனய் சூட் இன்ஸ்டாகிராமில் 14 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்டிருந்தார் மற்றும் அவரது யூடியூப் சேனலில் 380000 சந்தாதாரர்களைக் கொண்டிருந்தார். அவர் தனது பயண புகைப்படங்கள் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் வலைப்பதிவுகளுக்காக பிரபலமானார்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

அனுனய் சூட் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஃபோர்ப்ஸ் இந்தியாவின் சிறந்த 100 டிஜிட்டல் நட்சத்திரங்கள் பட்டியலில் இடம் பிடித்தார். அவர் துபாயில் வசித்து ஒரு மார்க்கெட்டிங் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

அவரது கடைசி பதிவு லாஸ் வேகாஸில் நடைபெற்ற கார் நிகழ்வைப் பற்றியது. அங்குள்ள கார்களின் சில புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார்...

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி