ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி ஒருநாள் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளது. ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. ந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மட்டும் 15 ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி ஒரு அணிக்கு எதிராக தொடர்ந்து அதிக ஒருநாள் போட்டி வெற்றியை பெற்றது என்ற பெருமையை ஜிம்பாப்வேக்கு எதிராக பெற்றுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முதல் இந்திய அணி தொடர்ந்து 15 ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாப்வேக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது. தற்கு அடுத்தபடியாக இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடர்ந்து 12 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1988ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.