டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது பாகிஸ்தான், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்தது ராதா யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார் இந்திய அணி 150 ரன்களை எட்டிப் பிடிக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது ஸ்ருதி மந்தனா கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த போட்டியில் களமிறங்கவில்லை இந்திய அணி வீராங்கனைகள் நிதானமாக விளையாடினர் களமிறங்கிய அனைத்து வீராங்கனைகளும் பவுண்டரிகளை அடித்தனர் முதல் மூன்று பந்தில் இந்திய அணியின் ரிச்சி கோஷ் ஹாட்ரிக் பவுண்டரிகளை பறக்கவிட்டு அசத்தினார் ஜெமிமா, 38 பந்தில் 8 பவுண்டரிகள் உள்பட 53 ரன்கள் விளாசினார் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது