இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின



முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது



ஸ்மிருதி மந்தனா 56 பந்தில் 87 ரன்கள் விளாசினார்



156 ரன்களை இலக்காக வைத்து அயர்லாந்து அணி களமிறங்கியது



முதல் பந்திலேயே துவக்க வீராங்கனை அமி ஹன்டர் ரன் அவுட் ஆகி வெளியேறினார்



2 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது



மழை நிற்காமல் தொடர்ந்து பெய்ததால் ஆடுகளம் ஈரமானது



டக்வோர்த் லூயிஸ் முறைப்படி வெற்றியாளரை முடிவு செய்தனர்



இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது



இதன்மூலம் இந்திய அணி உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது


Thanks for Reading. UP NEXT

2023 ஐபிஎல் : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முதல் 10 போட்டிகள்!

View next story