தேங்காயில் அதிக நார்ச்சத்து உள்ளது, இது செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும். தேங்காய் தயிர் சட்னி செய்வது எப்படி? தயிரை சரியாக அடித்து, அதை ஒதுக்கி வைக்கவும். ஒரு மிக்ஸி கிரைண்டரை எடுத்து, தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சீரான பேஸ்டாக மாறும் வரை அரைக்கவும். அடுத்தபடியாக தயிர் சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும். ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, முழு சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும். அந்த தாளிப்பு தயார் ஆனதும் அதனைத் தயார் செய்த சட்னியில் ஊற்றவும். சுவையான தயிர் தேங்காய் சட்னி ரெடி! தேங்காய் கலந்த உணவு என்பதால் விரைவில் புளித்துப் போக வாய்ப்பு உண்டு அதனால் அதனை உபயோகித்த பிறகு ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கவும்.