உடலின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வைட்டமின்களில் ஒன்று வைட்டமின் பி12
பி12 குறைபாடு இருந்தால் சிவப்பணுக்கள் உற்பத்தி பாதிக்கப்படும். இதனால், உடல் சோர்வாக இருக்கும்.
பி12 வைட்டமின் குறைபாடு இருந்தால் கண்களில் மஞ்சள் நிறம் போல தோன்றும். சருமமும் மிக கடுமையாக பாதிக்கும்.
பி12 வைட்டமின் மிகவும் குறைவான அளவில் இருந்தால் ஒற்றை தலைவலி ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
வைட்டமின் B12 குறைபாடு ஹோமோசிஸ்டீனை அதிகரிக்கிறது, இது மனச்சோர்வு மற்றும் மனநிலை தொடர்பான பிற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
பி12 வைட்டமின் குறைவாக இருந்தால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வீக்கம் போன்ற சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும்.
பி12 வைட்டமின் குறைபாடு இருந்தால் ஞாபக மறதி பாதிப்பு உண்டாகும்.
வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால் வாய் புண் போன்றவை ஏற்படும் அபாயம் உண்டு.
வைட்டமின் பி12 குறைபாடுகள் காரணமாக தசை பலவீனமாக இருப்பது போல உணரலாம்.