ஆண்களுக்கு பாலியல் ஆசைகள் குறைய காரணம் என்ன? - அலட்சியம் வேண்டாம்

Published by: ராஜேஷ். எஸ்

மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு போன்ற பிரச்னைகள் பாலியல் ஆசையை குறைக்கலாம். இவை உடல் செயல்பாட்டிலும் தாக்கம் செலுத்துகின்றன.

தினமும் போதுமான அளவு தூங்கவில்லை என்றால் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவுகள் குறைய வாய்ப்புள்ளது. இதனால் பாலியல் ஆர்வம் மற்றும் திறன் இரண்டும் பாதிக்கப்படும்.

சர்க்கரை நோய் காரணமாக நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் சேதமடையலாம். இதனால் விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

ஹை பிபி காரணமாக இரத்த ஓட்டம் சரியாக நடைபெறாமல் போகலாம். இது பாலியல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதிக எடை காரணமாக ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுகிறது. குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் குறைந்து பாலியல் திறன் பாதிக்கப்படுகிறது.

சிகரெட்டுகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். இதன் காரணமாக பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் குறைந்து பிரச்சனைகள் ஏற்படலாம்.

எப்போதாவதுமது அருந்துவதை விட அடிக்கடி மது அருந்துவது நரம்பு மண்டலம் மற்றும் ஹார்மோன்களை பாதித்து பாலியல் செயல்பாட்டை குறைக்கலாம்.

உடல் செயல்பாடு இல்லாவிட்டால் இரத்த ஓட்டம் குறையும், வழக்கமாக உடற்பயிற்சி செய்யாததும் கூட பாலியல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

டெஸ்டோஸ்டிரோன் போன்ற முக்கியமான ஹார்மோன்கள் குறைந்தால் பாலியல் ஆசை மற்றும் செயல்பாடு இரண்டும் குறைய வாய்ப்புள்ளது

உயர் இரத்த அழுத்தம் மன அழுத்தம் பதட்டம் போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் சில மருந்துகள் சிலருக்கு பாலியல் திறன் மீது பாதிப்பை ஏற்படுத்தலாம்

வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள், தூக்கம், மன ஆரோக்கியம், நாள்பட்ட நோய்கள் கூட இதன்மீது தாக்கம் செலுத்துகின்றன.