தினமும் வேர்க்கடலை; புரோட்டீன், விட்டமின், மெக்னீசியம்- இவ்ளோ நன்மைகளா?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

கடலையில் புரதம் அதிகமாக உள்ளது. இது குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

இதில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் B ஆகியவை குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவும்.

குறைந்த எடை கொண்ட குழந்தைகளுக்கு வேர்க்கடலை ஆரோக்கியமான எடை அதிகரிக்கும் உணவாக கருதப்படுகிறது.

மேலும் இதில் மெக்னீசியம், பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன.

3–5 வயதுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 5–6 வேர்க்கடலைகள் கொடுத்தால் போதும்.

6 வயதிலிருந்து 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 8–10 வேர்க்கடலை கொடுக்க வேண்டும்.

11 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 15- 20 வேர்க்கடலை கொடுக்கலாம்.

நிலக்கடலையை வறுத்து அல்லது வேகவைத்துக் கொடுக்கலாம். அதேபோல நிலக்கடலை பொடி/ கடலை பர்பியாக கொடுக்கலாம்.

நிலக்கடலையை அலர்ஜி இருந்தால் கொடுக்கக்கூடாது. மருத்துவர்களின் ஆலோசனை பெற வேண்டும்.