ஆணுறை பயன்படுத்தினாலும் கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளதா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

உடலுறவின்போது ஆணுறைகள் கிழிந்தால் விந்து யோனிக்குள் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் கர்ப்பம் தரிக்கும் ஆபத்து அதிகரிக்கிறது

ஆணுறை சரியாக அணியாவிட்டாலும் சிக்கல் தான். இதுபோன்ற சூழ்நிலைகளில் கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உள்ளது

விந்து ஆணுறைக்குள் சேமிப்பதை உறுதி செய்ய நுனியில் சிறிது இடம் விடம் வேண்டும்

ஆணுறை பயன்படுத்துவதற்கு முன் காலாவதி தேதியை சரிபார்க்க வேண்டும்

அதிக வெப்பம் உள்ள இடங்களில் ஆணுறைகளை நீண்ட காலம் வைத்திருப்பது அவற்றின் தரத்தை பாதிக்கும்

மிக சிறிய அல்லது மிக பெரிய ஆணுறையை பயன்படுத்தினால் அது கிழிந்துவிட வாய்ப்புள்ளது.

உடலுறவு தொடங்கிய பிறகு ஆணுறை அணிவது ஆபத்தானது ஏனென்றால் முன் விந்து திரவத்திலும் கூட கர்ப்பம் உருவாக வாய்ப்புள்ளது

ஆணுறைகளுடன் தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய் சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதும் ஆபத்தாக முடியலாம்

ஆணுறைகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த தயாரிக்கப்படுகின்றன. அவற்றை மீண்டும் பயன்படுத்துவது தவறானது

ஆணுறைகள் சரியான முறையில் பயன்படுத்தினால் கர்ப்பத்தின் அபாயத்தை குறைக்கும். ஆனால் 100 சதவீதம் தடுக்காது

ஆணுறை சரியான முறையில் பயன்படுத்தினால் பாலியல் நோய்களில் இருந்தும் பாதுகாப்பு பெறலாம்