அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

2 முதல் 4 வாரங்களுக்கு மேல் நீடிப்பது மருத்துவ ரீதியாக நாள்பட்ட வயிற்றுப்போக்கு எனப்படுகிறது.

குடல் நோய்க்குறி, உணவு ஒவ்வாமைகள், மருந்துகளின் பக்க விளைவுகள், குடல் அழற்சி இதற்கு காரணமாக இருக்கலாம்.

உடல் நீர்ச்சத்தைப் பராமரித்தல், குடல் பாக்டீரியாக்களைச் சீராக்குதல் போன்றவை வயிற்றுப்போக்கு பிரச்னைகளை சரி செய்யும்

மாதுளம்பழம் அல்லது அதன் தோலை நீரில் கொதிக்க வைத்து குடிப்பது உடனடியாக வயிற்றுப்போக்கை நிறுத்த உதவும்.

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்தாலும் பிரச்னை குறையும்

வயிற்றுப்போக்கு பிரச்னை இருந்தால் குடலுக்கு ஓய்வு தரும் எளிய உணவுகளை எடுக்க வேண்டும்.

வாழைப்பழம், நன்கு குழைந்த அரிசி சாதம், வேகவைத்த ஆப்பிள், காரம், எண்ணெய் இல்லாத கார்போஹைட்ரேட் உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்.

பால் பொருட்கள், வறுத்த மற்றும் பொரிந்த உணவுகள், காபி, டீ மற்றும் குளிர்பானங்கள் ஆகியவை அறவே தவிர்க்க வேண்டும்

குடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க மருத்துவர்கள் பரிந்துரையை கேட்டு நடக்கவும்.