தலைவலி- மைக்ரேன்; என்ன வித்தியாசம் தெரியுமா?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

சாதாரண தலைவலி பெரும்பாலும் டென்ஷன் தலைவலியாக இருக்கும்

ஒற்றைத் தலைவலி என்பது மூளையுடன் தொடர்புடைய ஒரு நரம்பியல் நோய்

பொதுவான வலி நெற்றிப்பொட்டின் இருபுறமும் அல்லது நெற்றியில் இருக்கும்

தினசரி வேலைகள் செய்வதால் சாதாரண தலைவலி அதிகரிக்காது

தூக்கமின்மை, சோர்வு, மன அழுத்தம் பொதுவான தலைவலிக்கு வழிவகுக்கும்

மைக்ரேனில் நெற்றிப்பொட்டில் ஒரு பக்கத்தில் கடுமையான துடிக்கும் வலி ஏற்படும்

பிரகாசமான ஒளி சத்தம், ஒற்றைத் தலைவலி வலியை அதிகரிக்கும்

மைக்ரேனில் வாந்தி அல்லது தலைச்சுற்றல் உணர்வும் ஏற்படும்

வலி தொடர்ந்து அதிகரித்தால் நரம்பியல் நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியம்