கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம் ஆகும்.

Published by: கார்த்திகேய பாலாஜி.அ
Image Source: Canva

நீரேற்றம்

தர்பூசணி பழத்தில் 92 சதவீதம் நீரேற்றம் உள்ளது. இதனால், கோடைகாலத்தில் உடலை குளுமையாக வைத்திருக்கும் சிறந்த உணவுப்பொருள் தர்பூசணி ஆகும்.

Image Source: Canva

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்

வைட்டமின் ஏ,பி6, சி, பொட்டாசியம் என பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இந்த தர்பூசணி பழத்தில் உள்ளது.

Image Source: Canva

அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு

இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இரும்புச்சத்தை உறிஞ்சும் திறனையும் அதிகரிக்கிறது.

Image Source: Canva

சருமம், பார்வைக்கு நல்லது

இதில் உள்ள வைட்டமின் ஏ சருமத்திற்கு நல்லது ஆகும். சருமத்தை பொலிவாக மாற்றும். மேலும், கண்பார்வையையும் அதிகரிக்கச் செய்யும்.

Image Source: Canva

இதய ஆரோக்கியம்

தர்பூசணியில் லைகோபீன் உள்ளது. இது இதய நோய் மற்றும் நாள்பட்ட நோய்க்கு எதிராக சிறப்பாக செயல்படும் ஆக்சிஜனேற்றியாகும்.

Image Source: Canva

அனைவரும் சாப்பிடலாம்

இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம். சுவையும் அருமையாக இருக்கும்.

Image Source: Canva

சூடுபிடிக்கும் விற்பனை

வெயில் காலத்தில் சாலையோரங்களிலும், பழக்கடைகளிலும் இதன் விற்பனை மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது.

Image Source: Pinterest/ MissMemesPlace

புத்துணர்ச்சியும், குளிர்ச்சியும்

.தர்பூசணி சாறு குடிப்பதால் வெயில் காலத்தில் உடல் புத்துணர்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.

Image Source: Canva