வயிற்று வலி ஒரு பொதுவான பிரச்சனை. எனவே ஒவ்வொரு முறையும் மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.

அடிக்கடி வந்தாலும், தீவிரமாக இருக்கும்போது மட்டுமே மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும், மருத்துவ உதவி பெற வேண்டும்.

சாதாரண வலி ஏற்படும் போது, சில வீட்டு வைத்தியங்களை பின்பற்ற வேண்டும்.

அமிலத்தன்மை அல்லது எரிச்சல் ஏற்பட்டால், பேக்கிங் சோடாவை நிவாரணமாகப் பயன்படுத்தலாம்.

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக பேக்கிங் சோடாவை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் ஏற்படலாம்.

இது அமிலத்தன்மையை குறைத்து வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

மஞ்சள் வயிற்று எரிச்சலை குறைத்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது.

ஆகையால் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் கலந்து குடிக்கலாம். இது பாதுகாப்பான நிவாரணமாகும்.

ஓமம், வாயு, வயிற்று வலி மற்றும் செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது.

ஓமத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்கலாம். அல்லது பவுடர் வடிவிலும் எடுத்துக் கொள்ளலாம்.