ஒரு நாளைக்கு 5 பேரிச்சம்பழம்.. ஒரு மாதம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்..

Published by: குலசேகரன் முனிரத்தினம்

பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. நாள்பட்ட மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

பேரிச்சம்பழத்தில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

அது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகையை குணப்படுத்தும் ஒரு இரும்புச்சத்து பெட்டகம் ஆகும்.

கால்சியம் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் எலும்புகள் மற்றும் பற்களை உள்ளிருந்து வலிமையாக்குகின்றன.

வைட்டமின் சி மற்றும் டி சருமத்திற்கு ஊட்டமளிக்கும். இதன் காரணமாக முகம் மிகவும் பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் மாறும்.

பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் கூந்தலின் வேர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். இது முடி உதிர்வதை தடுக்க உதவும்.

அதில் உள்ள விட்டமின் B6 மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

காலை உணவின் போது அல்லது உடற்பயிற்சி செய்த பிறகு 5 பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் நாள் முழுவதும் சோர்வாக உணர மாட்டீர்கள்.

உடலில் இருந்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

குறிப்பு இந்த தகவல் பொது அறிவை அடிப்படையாகக் கொண்டது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

Published by: குலசேகரன் முனிரத்தினம்