பற்கள் டபுள் ஸ்ட்ராங்கா இருக்கணுமா?. இந்த உணவுகளை உண்ணுங்க!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ள பால், தயிர் போன்ற உணவுகள் பற்களை வலுவாக வைத்திருக்கும்.

சீஸ் பற்களில் அமிலத் தன்மையை குறைத்து எனாமலை பாதுகாக்கிறது. இது குழிப் பல் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

இலை காய்கறிகளில் கால்சியம் மற்றும் ஃபோலேட் அதிகம் உள்ளது. இது பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

ஆப்பிள் இயற்கையான பல் சுத்திகரிப்பாளராக செயல்படுகிறது. உமிழ்நீரை அதிகரித்து பாக்டீரியாவை குறைக்கிறது.

கேரட் மொறுமொறுப்பான உணவாக இருப்பதால் பற்களை சுத்தம் செய்து ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பாதாமில் கால்சியம், புரதம் அதிகமாக இருப்பதால் பற்களின் வலிமைக்கு உதவும்.

எள்ளுவில் கால்சியம் அதிகம் உள்ளது. இது பற்களில் உள்ள கருப்பைக் குறைக்க உதவுகிறது.

பச்சை தேயிலையில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் பாக்டீரியா வளர்ச்சியை குறைக்கின்றன.

ஸ்ட்ராபெர்ரியில் உள்ள விட்டமின் சி ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பற்களை வெண்மையாக தோன்றச் செய்கிறது.

சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் உணவின் மீதமுள்ள துகள்கள் நீங்கி பற்கள் சுத்தமாக இருக்கும்.