இன்று பலரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக மூச்சுத்திணறல் மற்றும் சுவாசப் பிரச்சினை உள்ளது.
உடற்பயிற்சி மூலமாக நுரையீரல் வலுப்படும். இதன்மூலம் மூச்சு விடுவதற்கு சிரமம் இருக்காது.
நுரையீரல் சிறப்பாக இயங்குவதற்கு மூச்சுப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
உதரவிதான ஆசனம் செய்வதன் மூலம் நுரையீரலுக்கு நன்மைகள் உண்டாகும். இதனால், சுவாசிப்பது சிரமம் இல்லாமல் இருக்கும்.
உடலுக்குள் காற்றோட்டத்தை சமப்படுத்துவதில் இந்த மாற்று நாசி சுவாசப்பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இதய ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை தினசரி மேற்கொள்ள வேண்டும்.
பிராணாயாமம் எனப்படும் தியானப்பயிற்சி உடலில் ஆக்சிஜன் செயல்பாட்டை சீர்படுத்தும். நுரையீரல் ஆரோக்கியத்திற்கும் வலு சேர்க்கிறது.
உதட்டைச் சுருக்கி அதன் வழியாக காற்றை வெளியேற்றுவது ஒரு எளிமையான பயிற்சி ஆகும். இது மூச்சுத்திணறலை குறைக்க உதவுகிறது.
நுரையீரல் ஆரோக்கியத்தை கெடுப்பதில் புகை மற்றும் மது முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், அதை தவிர்க்க வேண்டும்.