கீழ் வயிற்று கொழுப்பு மற்றும் தொப்பையை குறைக்க விரும்பினால், ஒரு குறிப்பிட்ட மசாலாவை ஊற வைத்த தண்ணீரை குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கண்ணாடிப் பாத்திரத்தில் பச்சை சீரகத்தை எடுத்து தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். வறுத்த சீரகம் பயன்படுத்தக் கூடாது.
சீரகத்தை ஊற வைத்த தண்ணீர் குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். அதில் ஒன்று கொழுப்பை வேகமாக குறைக்கும்.
உடலில் சேர்ந்த அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க நாம் நிறைய மெனக்கெடுகிறோம். சீரகத்தை ஊற வைத்த தண்ணீரை ஒருமுறை குடித்துப் பாருங்கள்.
காலையில் வெறும் வயிற்றில் சீரகம் ஊற வைத்த தண்ணீர் குடித்தால் அதிக நன்மை கிடைக்கும். பச்சை சீரகம் இல்லையென்றால், சீரகப் பொடியை தண்ணீரில் ஊற வைத்து குடிக்கலாம்.
சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து, குடிப்பதற்கு முன் நன்றாகக் கரைத்து, வடிகட்டவும். பிறகு அந்த பானத்தை குடிக்க வேண்டும்.
சீரகத்தை ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால் உடல் எடை குறைவதோடு, அஜீரணம், வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளும் எளிதில் குணமாகும்.
சீரகத்தை ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால், நம் உடலில் வளர்சிதை மாற்ற விகிதம் நன்றாக இருக்கும். இதன் விளைவாக எடை குறையும். அதிகப்படியான கொழுப்பு குறையும்.
சீரகத்தை ஊற வைத்த தண்ணீர் குடிப்பதால் உடல் நச்சுத்தன்மையை நீக்கவும் உதவும். இதன் மூலம் உடல் உள்ளிருந்து சுத்திகரிக்கப்படும்.
சீரகத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சீரகம் ஊற வைத்த நீரை குடிப்பதால் பசி உணர்வு குறையும். செரிமான சக்தியும் மேம்படும்.