தினமும் 3 லி. தண்ணீர் குடிங்க; என்னென்ன நல்லது நடக்கும்னு பாருங்க!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

ஒவ்வொரு நாளும் உடலுக்கு 8 கிளாஸ் தண்ணீர் அல்லது 3 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். இதனால் ஏற்படும் நன்மைகளைப் பார்ப்போம்.

ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு தேவையான திரவம் கிடைக்கும். நீர்ச்சத்து குறைபாடு பிரச்சனை குறையும்.

போதுமான தண்ணீர் குடிப்பதால் உணவு எளிதில் ஜீரணமாகும். மலச்சிக்கல் குறையும்.

நீர் அதிகமாக குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். இதனால் சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும்.

தண்ணீர் குடிப்பதால் பசி ஓரளவு குறையும். இதனால் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது குறைந்து எடை குறையும்.

கோடையில் அல்லது உடற்பயிற்சி செய்யும் போது போதுமான தண்ணீர் குடிப்பதால் உடல் வெப்பநிலை சமநிலையில் இருக்கும்.

நீர் அதிகமாக குடிப்பதால் சிறுநீரக கற்கள் வரும் அபாயம் ஓரளவு குறையும்.

நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சோர்வு, தலைவலி மற்றும் கவனக்குறைவு ஏற்படலாம். போதுமான அளவு தண்ணீர் குடித்தால் மூளைக்கு இரத்த ஓட்டம் சீராகும்.

தண்ணீர் குறைவாகக் குடித்தால் உடல் விரைவில் சோர்வடையும். ஆனால் நீரேற்றத்துடன் இருந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உணரலாம்.

நாள்தோறும் போதுமான தண்ணீர் குடித்தால் சிறுநீர் வெளிர் நிறத்தில் இருக்கும். இது உடல் சரியான நீரேற்றத்துடன் இருப்பதைக் குறிக்கிறது.

ஒவ்வொருவரும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை. உடல் தேவைகள், காலநிலை, சுகாதார நிலைமைகளைப் பொறுத்து எடுத்துக் கொள்ளலாம்.