தினசரி குளிர்பானம் அருந்துவது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
குளிர்சாதன பெட்டியில் இருந்து நேரடியாக எடுத்து குளிர்பானங்களை குடிப்பது ஆரோக்கியமற்றது.
தினசரி குளிர்பானம் குடிப்பதால் கல்லீரல் பாதிப்பு அபாயம் உண்டாகும்.
தினசரி குளிர்பானம் குடிப்பதால் இன்சுலின் சுரப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
தினமும் குளிர்பானம் அருந்துவதால் உடலில் நீரிழிவு நோய், உடல் பருமன் உள்ளிட்ட பல சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும்.
குளிர்பானங்களில் அதிக பிரக்டோஸ் கார்ன் சிரப் இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.
பாஸ்போரிக் அமிலம், கார்போனிக் அமிலம் உள்ளது. இவை காலப்போக்கில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
தினசரி குளிர்பானம் குடிப்பதால் அதில் உள்ள சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகளவு உடலில் ஏற்படுகிறது. இதனால், எடை அதிகரிக்கும்.
தினசரி தொடர்ச்சியாக குளிர்பானம் குடிப்பதால் பல் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்.
கால்சியம் சத்தை பாஸ்போரிக் அமிலம் பாதிப்பதால் எலும்புகளை வலுவிழக்கச் செய்யும்.