இன்சுலின் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
வயிற்றின் கீழே கணையத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோனே இன்சுலின் ஆகும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
உங்கள் செல்களில் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை அதிகரிக்கும்போது, குளுக்கோஸ் அவற்றில் நுழைய முடியாது. இதன் காரணமாக சர்க்கரை அளவு உயர்ந்து நீரிழிவு நோய் அபாயம் உண்டாகிறது.
உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், தாவர உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம் ஆகும்.
உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க வெண்டைக்காய் அதிகரிக்கிறது. நார்ச்சத்து அதிகம் கொண்டது வெண்டைக்காய்.
வெண்டைக்காயின் விதைகள் இன்சுலின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஆல்பா குளுக்கோசிடேஸ் தடுப்பான்கள் அதிகம் உள்ளது.
ஏராளமான நன்மைகளை கொண்டது பாகற்காய். இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும் கராண்டின், வைசின் மற்றும் பாலிபெப்டைட்-பி இதில் உள்ளது.
உடலுக்கு ஆரோக்கியம் பயக்கும் வெந்தயத்தில் ட்ரைகோனெல்லின் உள்ளது. இன்சுலின் செயல்பாட்டிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
உடல் ஆரோக்கியமாக இருக்க புரதமும், கொழுப்பும் மிகவும் அவசியம் ஆகும். இது இன்சுலின் உற்பத்திக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.