கோடையில் குளுகுளு மோரில் தலை குளியல்; இவ்ளோ அற்புத பலன்களா?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

மோரில் உள்ள லாக்டிக் அமிலம் உச்சந்தலையை சுத்தம் செய்து, பொடுகு தொல்லையை குறைக்க உதவுகிறது.

மோர் இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு கூந்தலை மென்மையாக்குகிறது.

தலையில் படிந்துள்ள தூசி மற்றும் எண்ணெயை நீக்கி, உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்கும்.

மோர், முடிக்கு இயற்கையான பளபளப்பை அளிக்கிறது. அடிக்கடி பயன்படுத்தினால், முடி பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் தோன்றும்.

முடி உதிர்வதை குறைக்க உதவுகிறது. உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முடி வறண்டு போகாமல் பாதுகாக்கும். மோர் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடிக்கு ஈரப்பதத்தை அளிக்கும்.

முடி வலுவடையும். மோரில் உள்ள புரதங்கள் முடியின் வேர்களை வலுப்படுத்த உதவும்.

சரும அரிப்பு பிரச்சனை குறையும். உச்சந்தலையில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பைக் குறைக்க இது உதவும்.

வீட்டு வைத்தியம் மூலம் ரசாயனங்கள் இல்லாமல் கூந்தலை பராமரிக்கும் எளிய வழி இதுதான்.

மோர் கோடையில் குளிர்ச்சியை அளிக்கிறது. மோர் தலைக்கு குளிர்ச்சியை அளித்து கோடையில் ரிலாக்ஸ் உணர்வை ஏற்படுத்துகிறது.