பெரிய நெல்லிக்காய் பெருமளவு வைட்டமின் `சி' நிறைந்தது என்பது நாம் அறிந்ததே! நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். `நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடம்பில் இருக்கிற ரணங்களை விரைவில் ஆற்றும். வயிற்றுப் புண்களை குணமாக்கும். நெல்லிக்காயுடன் வறுத்த உளுந்து, காய்ந்த மிளகாய், தேங்காய் சேர்த்து அரைத்துத் துவையலாகச் சாப்பிடலாம். நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும். பெரிய நெல்லிக்காயில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. இதயத்துக்கும் நல்லது. வைட்டமின் `சி' நீரில் கரையும் தன்மை கொண்டது என்பதால், அதிகப்படியானதை உடம்பால் சேமித்து வைத்துக்கொள்ள முடியாது.