மேஷம்:
சொந்த வீடு கட்டும் யோகம் உண்டு. அதிகாரிகளின் உதவி கிட்டும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.


ரிஷபம்:
வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும்.


மிதுனம்:
உங்கள் காரியங்களை நீங்களே செய்ய வேண்டும். சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.


கடகம்:
எதிர்கால சேமிப்புகள் அதிகரிக்கும். பதவி உயர்வு தேடி வரும். ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும்.


சிம்மம்:
குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, மனை யோகம் உண்டு. கடன் வசூலாகும்.


கன்னி:
திருமணம் விரைவில் நடக்கும். வாழ்க்கைத்தரம், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.


துலாம்:
வீண் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் சண்டைகள் உண்டாகும். தட்சணாமூர்த்தியை வணங்க வேண்டும்.


விருச்சிகம்:
தெளிவான முடிவு எடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நல்ல வேலை கிட்டும்.


தனுசு:
கணவன்- மனைவி இடையே வீண் சந்தேகம் கூடாது. பெரிய முதலீடுகள் கூடாது. குருவை வணங்கி பயன் பெறுக.


மகரம்:
தைரியம் அதிகரிக்கும். பிறரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


கும்பம்:
பணபலம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.


மீனம்:
பிறருக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடாது. இயல்புக்கு மாறாக செயல்படக்கூடாது.