அம்பத்தி ராயுடு 2004ஆம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் கேப்டனாக இருந்தார். அதன்பின்னர் அவர் ஆந்திரா மற்றும் பரோடா அணிகளுக்காக ரஞ்சி போட்டியில் பங்கேற்றார். 2011ஆம் ஆண்டு இவரை மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுத்தது. மும்பை அணி ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்ல முக்கியமான ஒரு வீரராக இவர் வலம் வந்தார். 2013ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார். 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை அணியில் இவர் இடம்பெறாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. 2018ஆம் ஆண்டு முதல் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். 2019ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயுடு விக்கெட் கீப்பிங் செய்தார். தற்போது வரை 187 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள 4187 ரன்கள் அடித்துள்ளார். இவர் தற்போது விரைவில் தன்னுடைய ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.