பாலில் இருந்து எடுக்கப்படும் நெய் இனிப்புகள் தயாரிப்பதற்கு மிகவும் முக்கியமான மூலபொருளாக உள்ளது.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் நெய்யைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிட்டால் ரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உண்டு. இதய ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் அபாயம் உண்டு.
நெய் சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாவது, வாத, பித்த தோஷங்கள் நீங்குவது போன்ற உடலுக்கு ஆரோக்கியமான விஷயங்கள் நடக்கும்.
நெய் ஆரோக்கியமான உணவு என்றாலும் அதில் உள்ள கொழுப்பு அனைவருக்கும் உகந்தது கிடையாது. செரிமான பாதிப்பு, உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றை உண்டாக்கவும் வாய்ப்புகள் உண்டு.
உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர்கள் நெய்யைத் தவிர்ப்பது நல்லது ஆகும். நெய்யில் கலோரிகள் அதிகம் என்பதால் இது மேலும் எடையை அதிகரிக்கும்.
உயர் கொழுப்பு உள்ளவர்கள் நெய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது கெட்ட கொழுப்பை அதிகரிக்கலாம். இதயநோய் பாதிப்பு உள்ளவர்களை பாதிக்கக்கூடும்.
அலுவலகத்தில் உட்கார்ந்தே பணியாற்றுபவர்கள் நெய் சாப்பிடுவதை தவிர்க்கலாம். தினசரி உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதால் இவர்களுக்கு இது பாதிப்பை உண்டாக்கும்.
செரிமான பிரச்சினை கொண்டவர்கள், மலச்சிக்கல் பிரச்சினை கொண்டவர்கள் நெய்யைத் தவிர்க்கலாம். இல்லாவிட்டால் வயிற்றில் வாயு, அமிலத்தன்மை பிரச்சினை உண்டாகும்.