மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கீழே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Pinterest/AayanshKitchen

உடலை குளிர்விக்கும் திறன் கொண்டது

இயற்கையாகவே உடலை குளுமையாக வைத்திருக்கும் குணம் மோருக்கு உண்டு. உடலின் வெப்பத்தை இது இயற்கையாகவே தணிக்கும்.

Image Source: Pinterest/cookwithmanali

குறையும் அமிலத்தன்மை

மோர் வயிற்றை குளுமைப்படுத்துகிறது. அதிகபடியான அமிலத்தன்மையை கட்டுப்படுத்தும் தன்மை மோருக்கு உண்டு.

Image Source: Pinterest/sharmispassions

மலச்சிக்கலுக்கு நிவாரணம்

குடல் இயக்கத்தை சீராக்குகிறது. மோர் குடிப்பதால் மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு உண்டாகும்.

Image Source: Pinterest/pipingpotcurry

உடலை புத்துணர்ச்சியாக்குகிறது

இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், எலக்ட்ரோலைட்டுகளும் உள்ளது. உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்திக்க உதவும்.

Image Source: Pinterest/sailu

அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி

புரோபயாடிக்குகள், வைட்டமின்கள் அதிகளவு இருக்கும் இந்த மோர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Image Source: Pinterest/akashjoseph12

உடலில் நீரேற்றத்தை தக்க வைக்கிறது

மோரில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்துக் கொள்கிறது. வெயில் காலங்களில் குடிக்க வேண்டிய அவசியமான பானமாக மோர் உள்ளது.

Image Source: Pinterest/playfulcooking

சரும பராமரிப்பு

மோரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை பளபளபாக்கும். வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் உள்ளதால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

Image Source: Pinterest/indiaphile

குறையும் ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தத்தை குறைக்கும் உயிரிய புரதங்கள் இதில் உள்ளது. இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.

Image Source: Pinterest/foodiesterminal

குறையும் கொழுப்பு

இதில் உள்ள புரதங்களும், ஆரோக்கியமான கொழுப்புகளும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது.

Image Source: Pinterest/whiskaffair

நோயில் இருந்து பாதுகாப்பு

சிறந்த செரிமானம், குடல் ஆரோக்கியத்தை சரி செய்வதால் மோர் உடலில் நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

Image Source: Pinterest/archanaskitchen