சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள் சிறப்பு பகிர்வு!

Published by: ஜான்சி ராணி

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 52-வது பிறந்த நாள் ஆகும்.

சிறு வயதில் வலைபயிற்சியில் அவுட்டே ஆகாமல் இருந்து தனது பயிற்சியாளர் ராமகாந்த் அச்ரேகரிடம் நாணயங்களை பரிசாக பெறுவாராம் சச்சின். அதுபோல அவர் 13 நாணயங்களை தனது பயிற்சியாளரிடம் பெற்றாராம்.

சச்சின் டெண்டுல்கர் தனது சிறு வயதில் தூங்கும்போது பேட்டுடன் தூங்குவாராம். சச்சின் டெண்டுல்கர் முதன் முதலில் வாங்கிய கார் மாருதி 800.

சச்சின் மிகப்பெரிய உணவுப்பிரியர். குறிப்பாக வட பாவ் அவருக்கு ரொம்பவும் பிடிக்குமாம்..

சச்சின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 34,357 ரன்கள் எடுத்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர்.

சச்சின் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 49 சதங்களையும் அடித்துள்ளார். அனைத்து ரக கிரிக்கெட் போட்டிகளிலும் 100 சதங்கள் அடித்த பெருமைக்குரியவர்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் அடித்த பேட்ஸ்மேன் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரே முதலிடம்.

கிரிக்கெட் துறையில் இவரது பங்களிப்பை போற்றும் வகையில் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா, பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.