சச்சின் டெண்டுல்கர் சொத்து மதிப்பு தெரியுமா?

Published by: ஜான்சி ராணி

கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு 52-வது பிறந்த நாள் ஆகும். ஏப்ரல்,24, 1973 அன்று பிறந்தார்.

கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள், டெஸ்டில் அதிக சதங்கள் என யாருமே நெருங்க முடியாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர்.

கிரிக்கெட் என்றதும் பலருக்கும் சச்சின் டெண்டுல்கர்தான் நினைவுக்கு வருவார். அவர் விளையாடுவதை கண்டு கிரிக்கெட் விளையாட்டிற்கு அறிமுகமானவர்களும் உண்டு.

சச்சின் டெண்டுல்களின் கிரிக்கெட் பயணம் என்பது சாதனைகள் உள்பட பல்வேறு சிறந்த தருணங்களால் ஆனது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவரது புகழ் எப்போதும் இருக்கும் ஒன்றாக இருக்கிறது.

சச்சின் டெண்டுல்கர் 22 ஆண்டிகள் கிரிக்கெட் பயணத்தில் அவரது சாதனைகள் மூலம் கிரிக்கெட் வரலாற்றை எழுதியவர்.

TOI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, சச்சின் டெண்டுல்கரிடம் 145 கோடி சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PayTM First Games, Ageas Federal Life Insurance ஆகியவற்றின் Brand ambassador ஆக இருக்கிறார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், சச்சின். ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருங்க!