TVS Apache பைக் 5 லிட்டர் பெட்ரோலில் எவ்வளவு தூரம் செல்லும்?

Published by: ராஜேஷ். எஸ்

நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்பம்:

தொழில்நுட்ப ரீதியாக இந்த பைக் பல புதிய அப்டேட்டுகளைப் பெற்றுள்ளது.

TFT டிஸ்ப்ளே:

இதில் புளூடூத் வசதியுடன் கூடிய SmartXonnect TFT ஸ்கிரீன் உள்ளது. இது நேவிகேஷன் மற்றும் கால் அலர்ட் வசதிகளை வழங்குகிறது.

ரைடிங் மோடுகள்:

நகர்ப்புற மற்றும் மழைக்கால ரைடிங்கிற்கு ஏற்ப அர்பன் (Urban), ரெயின் (Rain) மற்றும் ஸ்போர்ட் (Sport) ஆகிய மூன்று மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கோல்டு அலாய் வீல்கள்:

பைக்கிற்கு ஸ்போர்ட்டி லுக்கை தரும் வகையில் அலாய் வீல்களும் டூயல்-டோன் கோல்டு நிறத்தில் மாற்றப்பட்டுள்ளன.

Published by: ராஜேஷ். எஸ்

பாதுகாப்பு:

சிறந்த பிரேக்கிங் கட்டுப்பாட்டிற்கு டூயல்-சேனல் ஏபிஎஸ், ட்ராக்ஷன் கண்ட்ரோல் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

USB சார்ஜர்:

பயணத்தினபோது மொபைல் சார்ஜ் செய்ய கூடுதலாக ஒரு யூஎஸ்பி போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

புதிய கலர் மற்றும் பிரீமியம் டிசைன்:

இந்த ஸ்பெஷல் எடிஷனின் மிக முக்கிய அம்சமே இதன் வண்ண வடிவமைப்புதான்.

மேட் சேம்பைன் கோல்டு (Matte Champagne Gold):

பைக் முழுவதும் புதிய பிளாக் மற்றும் கோல்டு கலந்த பிரீமியம் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மைலேஜ்:

ஒரு லிட்டர் பெட்ரோலில் சுமார் 45 கி.மீ., வரை செல்லும், 5 லிட்டர் பெட்ரோலில் சுமார் 225 கி.மீ., தூரம் வரை செல்லும்.

இன்ஜின் திறன் மற்றும் விலை:

இதன் இன்ஜின் செயல்திறனில் மாற்றங்கள் இல்லை. வழக்கமான 159.7cc, ஆயில்-கூல்டு இன்ஜின் 17.55 PS பவரை வெளிப்படுத்துகிறது.
இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ. 1.38 லட்சம் முதல் ரூ. 1.51 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.