உங்க காரின் மைலேஜ் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? இதோ ஈஸி டிப்ஸ்
Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pixabay
தற்போதைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலைகள் வானளவு உயர்ந்துள்ளன. இதன் காரணமாக மக்கள் தங்கள் கார் மைலேஜை பராமரிக்க முயற்சிக்கின்றனர்.
Image Source: pexels
உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் கார் ஓட்டும் விதத்தால் கார் மைலேஜ் கூட பாதிக்கப்படும்.
Image Source: pexels
உங்கள் கார் மைலேஜை மேம்படுத்த நீங்கள் என்ன முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பார்ப்போம்.
Image Source: pexels
வாகனம் நல்ல மைலேஜ் பெற வாகனத்தை ஒரே வேகத்தில் ஓட்ட வேண்டும். திடீரென வேகத்தை அதிகரிக்க வேண்டாம் அல்லது பிரேக் போட வேண்டாம்.
Image Source: pexels
தவறான கியர் பயன்படுத்துவதால் இன்ஜின் மீது அழுத்தம் ஏற்படும். எனவே வேகம் குறைவாக இருக்கும்போது உயர் கியரில் வாகனத்தை ஓட்ட வேண்டாம்.
Image Source: pexels
கிளட்ச் பெடலின் மீது காலை வைத்து காரை ஓட்ட வேண்டாம். இதனால் கிளட்ச் பிளேட் பழுதடையும் பெட்ரோல் அதிகமாக செலவாகும்.
Image Source: pexels
டயர்களில் காற்றை எப்போதும் சரிபார்த்துக்கொண்டே இருங்கள். காற்று குறைவாக இருக்கக்கூடாது அதிகமாகவும் இருக்கக்கூடாது. இதனால் இன்ஜின் மீதான அழுத்தம் குறையும்.
Image Source: pexels
காரில் தேவையற்ற பொருட்களை வைக்க வேண்டாம். இதனால் இன்ஜின் மீது அதிக சுமை ஏற்படும்.
Image Source: pexels
சிக்னலில் அல்லது வாகனம் வேகம் குறையும்போது ஏசியை அணைக்கவும் இதன் மூலம் 30 வரை எரிபொருளை சேமிக்கலாம்.