12 அங்குல பின் சக்கரம், அண்டர்சீட் ஸ்டோரேஜ், டேங்க் கெப்பாசிட்டி 24.6 லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு முழு அளவிலான ஸ்மார்ட்போன்களை வைக்கும் அளவுக்கு பெரிய பெட்டியுடன், USB சார்ஜிங் போர்ட்டும் கிடைக்கிறது.
பேஸ் வேரியன்ட்டில் சாதாரண LCD டிஸ்ப்ளே மற்றும் மெக்கானிக்கல் கீ மட்டுமே இருக்கும். இந்த இரண்டு வேரியன்ட்களுக்கும் இடையே சுமார் ரூ.12 ஆயிரம் விலை வித்தியாசம் உள்ளது.
எந்த ஒரு வேரியன்ட்டிலும் சிங்கிள் சேனல் ABS வழங்கப்படாதது ஒரு முக்கிய குறைபாடாகக் கூறலாம்.
2026 சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஒரு லிட்டருக்கு 56.6 கிமீ மைலேஜ் கொடுக்கிறது.
2026 சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.06 லட்சம் முதல் ரூ.1.18 லட்சம் வரை உள்ளது. ஆன்ரோடு விலை சுமார் ரூ.1.27 லட்சம் முதல் ரூ.1.40 லட்சம் வரை உள்ளது.