ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் பட்டைய கிளப்பும் Joy e-bike Gen Nxt இ ஸ்கூட்டர்!

ஜாய் நிறுவனத்தின் Joy e-bike Gen Nxt இ ஸ்கூட்டரின் விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

Published by: ABP NADU

Gen Nxt Nanu முதல் வேரியண்ட்

ரூபாய் 60 ஆயிரத்து 267

Gen Nxt Eco 2வது வேரியண்ட்

ரூபாய் 68 ஆயிரத்து 367

Gen Nxt Nanu கடைசி வேரியண்ட்

ரூபாய் 74 ஆயிரத்து 803

90 கிலோமீட்டர் மைலேஜ்

இந்த Joy e-bike Gen Nxt இ ஸ்கூட்டரின் விலை பட்ஜெட்டில் இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு இது பக்கபலமாக உள்ளது. இதில் 1.86 கிலோவாட் மற்றும் 2.18 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்

முதல் வேரியண்ட்டில் அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 2வது வேரியண்டில் 46 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். கடைசி வேரியண்டில் 55 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது.

வசதிகள்

டெலிஸ்கோபிக் ஃபோர்க் டைப் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் அட்ஜஸ்ட் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது.சிக்னல் விளக்குகள் எல்இடி-யில் பொருத்தப்பட்டுள்ளது. டிக்கி வசதியும் உள்ளது.