இந்த Vespa 125 ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 58 ஆயிரத்து 555. மொத்தம் 4 வேரியண்ட்கள் இதில் உள்ளது.39 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 288 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.
வெஸ்பா நிறுவனத்தின் 150 சிசி எஞ்ஜின் ஸ்கூட்டரான Vespa S 150 இரண்டு வேரியண்ட் உள்ளது. ஒரு வேரியண்ட் ரூபாய் 1 லட்சத்து 79 ஆயிரத்து 604ம், இரண்டாவது வேரியண்ட் ரூபாய் 2 லட்சத்து 39 ஆயிரத்து 621-க்கும் விற்கப்படுகிறது.அதிகபட்சமாக 93 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.
வெஸ்பா நிறுவனத்தின் மற்றொரு 150 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் Vespa 150. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 73 ஆயிரத்து 875. இதில் 2 வேரியண்ட் உள்ளது. 35 முதல் 40 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.
வெஸ்பா நிறுவனத்தின் Vespa ZX 125 ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 42 ஆயிரத்து 775. இதில் 124.45 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 333 கி.மீட்டர் மைலேஜ் அளிக்கும் ஆற்றல் கொண்டது.
வெஸ்பா நிறுவனத்தின் Vespa Officina 8 ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 58 ஆயிரத்து 747. இதில் 124.5 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 37.5 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதில் 7.4 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது.