அதுல்யா ரவிக்கு பூர்வீகம் கோயம்புத்தூர். பொறியியல் படிப்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பட்டம் பெற்றவர். ‘பால்வாடி காதல்’ என்ற குறும்படம் மூலம் பிரபலமானார். காதல் கண் கட்டுதே படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். ஏமாலி, நாடோடிகள் 2, சுட்டுப்பிடிக்க உத்தரவு உள்ளிட்ட படங்களில் நடித்தார். உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர். இன்ஸ்டாகிராமில் அதிக ஆக்டிவாக இருப்பவர். இன்ஸ்டாகிராமில் இவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். செல்லப்பிராணிகள் மீது பிரியம் கொண்டவர். பெற்றோரின் சப்போர்ட்டின் வாயிலாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.