மாம்பழம்னா அவ்வளவு பிரியமா? இதோ உங்களுக்காக ஒரு இனிப்பு ரெசிபி; ஆம்ரஸ்



ஆம்ரஸ் செய்ய அல்ஃபோன்சா மாம்பழம்தான் சிறந்தது. ஆனால்,நல்ல பழுத்திருக்கும் பங்கனப்பள்ளி போன்ற மாம்பழங்களிலும் செய்யலாம்.



தேவையான அளவுக்கு நன்கு பழுத்த மாம்பழத்தின் தோல் சீவி, அதன் உள்பகுதியை எடுத்துக் கொள்ளவும்.



தோல் நீக்கிய மாம்பழத்தை மிக்ஸியில் ஒரு ஓட்டு அரைத்தெடுக்கவும்.



இதோடு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.



இனிப்பு மாம்பழ கூழில் காய்சிய, ஆறிய பால் சிறிதளவு சேர்த்து கலக்கவும்.



அவ்வளவுதான். ஆம்ரஸ் ரெடி. இதோடு ஏலக்காய் தூள் சிறிதளவு கலந்து கொள்ளலாம்.



ஆம்ரஸ், பூரி,சப்பாதி உடன் சாப்பிட சிறந்த சாய்ஸ். இதை அப்படியேயும் சாப்பிடலாம்.



ஆம்ரஸ் ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லுன்னு சாப்பிடலாம்..



ஆம்ரஸ் ஒரு ஸ்பெசல் இனிப்புதான். வீட்டில் செய்து கோடையை கொண்டாடுங்கள்!