அமெரிக்கா சுதந்திரம் பெற்று நூறாண்டுகள் ஆனதையொட்டி பிரான்சு நாடு கொடுத்த பரிசு, சுதந்திர தேவி சிலை! லிபர்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமான சுதந்திர தேவி சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையை வடிவமைத்தவர் பிரடெரிக் அகஸ்தே பர்தோல்டி. இவருடன் குஸ்டவ் ஈபிள் என்பவரும் வடிவமைப்பில் உதவியிருக்கிறார். 1875- 1884 காலத்தில் உருவாக்கப்பட்ட சிலை, பிரான்சில் இருந்து கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அக்டோபர் 28-ம் தேதி அமெரிக்க மக்களுக்குச் சுதந்திர தேவி சிலை அர்ப்பணிக்கப்பட்டது. சுதந்திர தேவியின் வலது கையில் தீப்பந்தம் உள்ளது. இடது கையில் ஜூலை 4, 1776 என்று எழுதப்பட்ட புத்தகம் இருக்கிறது. இது அமெரிக்கா விடுதலைப் போர் சரித்திரத்தைக் குறிக்கிறது. தலையில் 7 முனைகள் கொண்ட கிரீடம் இருக்கிறது இந்த 7 முனைகள், 7 கண்டங்களையும்,7 கடல்களையும் குறிக்கின்றன. பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர். சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர்.