நடிகை அதிதி ராவ்- சித்தார்த் காதலிப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன



இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களும் அடிக்கடி வெளியாகி வருகிறது



ஆனால் இதுகுறித்து அவர்கள் இருவரும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை



தற்போது நாளிதழ் ஒன்றிற்கு அதிதி ராவ் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்



அதில் சித்தார்த்தும் நீங்களும் நண்பர்களா? அதற்கும் மேலா? என கேள்வி கேட்கப்பட்டது



அது என் தனிப்பட்ட வாழ்க்கை என்று அவர் பதில் அளித்துள்ளார்



குடும்பத்தினர், நண்பர்கள், என் சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் அவர்கள் எனக்கு முக்கியமானவர்கள்



அதை பொது வெளியில் விவரிக்க வேண்டிய தேவை இல்லை



சில விஷயங்களை பற்றி பேசுவதற்கு நேரமும், இடமும் இருப்பதாக நான் நினைக்கின்றேன்



இவ்வாறு அதிதி ராவ் தனது பேட்டியில் கூறி இருந்தார்